வவுனியா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தமையால் பதற்றமான சூழ்நியொன்று ஏற்பட்டிருந்தது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று மதியம் குறித்த நபர் மற்றும் 37 வயதான பெண் ஒருவரிற்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் தீயில் எரிந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தநிலையில் காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்ததுடன், குறித்த இளைஞரும் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார். 

வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த போதே மாடிகட்டத்தில் ஏறி மீண்டும் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக தெரியவருகின்றது.

வைத்தியசாலையின் மூன்றாவது மாடிக்கட்டடத்தில் ஏறிய குறித்த இளைஞன் கீழே குதிக்க முயற்சி செய்ததுடன், கையில் வைத்திருந்த கண்ணாடி துண்டால் தனது கழுத்தையும் வெட்டியுள்ளார்.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் மாடிக்கட்டடத்தில் ஏறி குறித்த இளைஞனை பிடித்து வைத்தியசாலையில்  அனுமதித்தனர்.

புதியகற்பகபுரத்தை சேர்ந்த சிறிமோகன் நிதர்சன் வயது 27 என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்துள்ளார்.

இதனால் வவுனியா வைத்தியசாலையில் சற்றுநேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.