தேசத்தில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும் ; மாவை 

Published By: Digital Desk 4

07 Oct, 2019 | 04:52 PM
image

நாங்கள் எங்கள் தேசத்தில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்து முடிவு எடுக்கவேண்டும் அவ்வாறு செய்வதுதான் எமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் கடமையாகும் எனத் இலங்கைத் தழிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மாவை சேனாதிறாஜா தெரிவித்துள்ளார்,

 அத்தோடு விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் நாம் போதைக்கு எதிராகவும் போராடவேண்டியவர்களாகவுள்ளோம் எனவும் தொரிவித்தார்

புத்தூர் ஆவரங்கால் உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தினர் நடத்திய சர்வதேச முதியோர் தின நிகழ்வு உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தின் தலைவர் தலையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அதனைத் தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நாங்கள் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றோம் தொடர்ந்தும் போராடியவர்களாகவுள்ளோம் இத்தகைய சுழலில் எமது விடுதலைக்காக போராடும் போது அதனை குழம்பும் வகையில் பல்வோறு அடக்கு முறைகளும் பிரித்தாளும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது. இவற்றுக்கு எதிராகவும் போராடவேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம். இதில் ஒன்றுதான் போதைவஸ்து இன்றைய சமுதாயத்தில் போதைவஸ்து பாவனை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. எமது இளம் சமுதாயத்தை சிதைக்கும் வகையிலே இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது இதற்கு ஏதிராக போராட வேண்டியவர்களாகவுள்ளோம்

எத்தகைய போராட்டங்கள் என்றாலும் நாங்கள் அனைவரும் ஒருமித்து போராடவேண்டும் ஒரு மித்த முடிவுகள் எடுக்கும்போது அதனை அனைவரும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்தும் போதுதான் அதன்பலன் எமது தேசத்தின் விடுதலைக்கு பலமாக இந்த ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபடவேண்டும்.

முதியோர் தின நிகழ்வினை உதவும் கரங்கள் அமைப்பினர் முன்னின்று செய்கின்றார்கள் இத்தகைய இளைஞர்களைபோல் ஏனைய இளைஞர்களும் தமது கிராமத்தில் உள்ள முதியவர்களை கௌரவிக்கவேண்டும். முதியவர்கள் தான் இன்றைய வழிகாட்டிகள் அவர்களைப் பாதுகாக்கவேண்டும் தழிழர்களின் பண்பாட்டு விழுமியங்களில் ஒன்றாகும் அதேபோல் எமது பண்பாடுகளை பேணிபாதுகாப்பது எமது கடமையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55