சீனாவில் அரிய வகை வெள்ளை நிற சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன.

சீனாவின் கிழக்கு மாகாணமான ஷான்டாங்கில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஆப்ரிக்க சிங்கங்களின் ஒரு வகையான அல்பினோ என்றழைக்கப்படும் வெள்ளை நிற சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அங்குள்ள இரண்டு பெண் சிங்கங்களில் ஒன்று, கடந்த அக்டோபர் 2ம் திகதி, ஒரே பிரசவத்தில் இரு வெள்ளை நிற சிங்கக்குட்டிகளை ஈன்றது. அவற்றில்  ஒன்று ஆண் சிங்கம்  மற்றொன்று பெண் சிங்கம்.

அவற்றை பூங்கா பராமரிப்பாளர்கள் இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகின்றனர். அவ்வப்போது, ஆட்டு பாலும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது.

சீனாவின் தேசிய தினம் கடந்த 1ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அதன் மறுநாளே இவ்விரு குட்டிகளும் பிறந்ததால், அவற்றை ‘தேசிய தின குழந்தைகள்’ என பூங்கா நிர்வாகிகள் அன்புடன் அழைத்து வருகின்றனர்.