(எம்.மனோசித்ரா)

நாட்டை தொடர்ந்தும் முன்னேற்றுவதற்கு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெருவோம். எமது பலத்தை உறுதிப்படுத்துவதோடு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம். மக்கள் வயிற்றில் அடிக்கும் பொதுஜன பெரமுன தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

அவ்வாறானவர்கள் நாம் நாட்டை முறையாக ஆட்சி செய்யவில்லை என்று எம்மீது குற்றஞ்சாட்டுக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து ஊழியர்களின் வருமானத்தை குறைப்பதற்காகவா அவர்களிடம் ஆட்சியை கையளிக்கக் கோருகின்றர் என்பதே எமது கேள்வியாகும்.

இது பற்றி பொது மேடைகளில் வந்து கருத்துக்களை தெரிவிக்குமாறும், எம்முடன் விவாதத்தில் ஈடுபடுமாறும் கோருகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றார்.