கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் 11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட இருவரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுவிட்டு பேரூந்தில் சென்ற சிறுமி கண்டாவளை பிரதேச செயலகம் அருகில் இறங்கி வீடு செல்வதற்கு நடந்த சென்ற போது வீதியில் இருபுறமும் உள்ள பற்றைக்குள் மறைந்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவுர் குறித்த சிறுமியை வாயை பொத்திப் பிடித்தப்படி பற்றைக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அவருடன் பிரிதொரு நபரும் சென்றுள்ளார்.
இதன் போது குறித்து சிறுமி கதறி கூக்குரல் எழுப்பிய போது இழுத்துச் சென்றவரின் கையை கடித்து விட்டு வீதிக்கு தப்பியோடியுள்ளார். இதன் போது குறித்த சிறுமியின் சகோதரனும் அவ் வீதியால் பயணித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் சகோதரன் அவர்களை தாக்குதவதற்கு விரைந்த போது ஒருவன் தப்பிச் சென்ற நிலையில் ஒருவரை தாக்கியுள்ளார்.
பின்னர் கிளிநொச்சி பொலீஸ் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு சிறுமி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பொலிஸார் இன்றைய தினம் குறித்த நபர் உட்பட இருவரையும் கைது செய்துள்ளனர் இருவரையும் நாளைய தினம் (செவ்வாய்கிழமை) கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM