(நா.தனுஜா)

சார்க் அமைப்பின் 14 ஆவது பொதுச்செயலாளராக இலங்கையின் முன்னாள் வெளிவிகார செயலாளரும், சிரேஷ்ட தொழில்முறை இராஜதந்திரியும், ஜனாதிபதியின் தற்போதைய சிரேஷ்ட மேலதிக செயலாளருமான எசல வீரக்கோன் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்.

நியூயோர்க்கில் கடந்த வாரம் நடைபெற்ற சார்க் அமைச்சர்களின் முறைசாராக் கூட்டத்தின் போதே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சார்க் அமைப்பின் பொதுச்செயலாளராக எசல வீரக்கோனை நியமிப்பதற்கான முன்மொழிவிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நியூயோக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆவது அமர்வின் பக்கநிகழ்வாக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, சார்க் அமைப்பின் பொதுச்செயலாளராக இலங்கையரொருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதை வரவேற்றதுடன், சார்க் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை முழுமையான பங்களிப்பை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.