ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்வாதிகாரி’ என பெயரிடப்படவிருக்கிறது.

‘கோமாளி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவி, என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அஹமத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘சர்வாதிகாரி ’ என பெயரிடப்படவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் ஜெயம் ரவி, டாப்சி, ரகுமான், எம்எஸ் பாஸ்கர், ஈரானிய நடிகை எல்நாஸ் நவ்ரோஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதனிடையே ‘சர்வாதிகாரி’ என்ற பெயரில், 1951 ஆம் ஆண்டில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில், அவருடைய 25வது படமாக, வெளியாகி இருக்கிறது என்பதும், ‘கோமாளி ’பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் ‘கோமாளி =2’ அல்லது வேறு ஒரு புதிய திரைக்கதையை ஜெயம் ரவிக்காக உருவாக்கி இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.