(நமது நிருபர்)

ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­­வுக்கு, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்சி நிபந்­த­னையற்ற ஆத­ரவு வழங்க முடிவு செய்­தி­ருப்­பதை அடுத்து, கட்சி மூன்­றாக பிள­வு­படும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த வௌ்ளிக்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளு­ட­னான கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. 

அதில், பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு பெரும்­பான்­மை­யானோர் இங்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர். 

.இதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தியக் குழுக்­கூட்டம் நேற்று முன்­தினம் இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் இடம்­பெற்­றது. இங்கு பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தா­பாய ராஜ­பக்ஷ ஆத­ரவு அளிப்­பது தொடர்பில் கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டுள்­ளன. இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான துமிந்த திஸா­நா­யக்க, மஹிந்த சம­ர­சிங்க உட்­பட சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமை­தி­யாக இருந்­துள்­ளனர். 

இந்த நிலையில், பொது­ஜன பெர­முன வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு நிபந்­தனை அற்ற ஆத­ரவு அளிப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா­னித்­துள்ளார். இந்த நிலைப்­பாட்டை சுதந்­திரக் கட்­சியின் ஒரு பகு­தி­யினர் எதிர்த்­துள்­ளனர். 

இத­னை­விட சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம இந்த முடி­வினை எதிர்த்து தனித்து கள­மி­றங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்ளார். இவ­ருக்கும் சுதந்­திரக் கட்­சியின் ஒரு தரப்­பினர் ஆத­ரவு வழங்­க­வுள்­ளனர். இந்த நிலையில் சுதந்­திரக் கட்சி மூன்று பிரி­வு­க­ளாக பிள­வு­படும் நிலை தோன்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ள அணி­யி­னரில் ஒரு பகு­தி­யினர் சுதந்­திரக் கட்­சியைப் பாது­காக்கும் இயக்கம் என்ற பெயரில் இயங்­க­வுள்­ளனர். அவர்­களின் சார்பில் குமார வெல்­கம ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ளார்.

மற்­றொரு அணி­யினர், சுதந்­திரக் கட்­சியில் இருந்து கொண்டே, ஐக்­கிய தேசிய கட்சி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆதரவு அளிக்கவுள்ளனர் அல்லது ஐ.தே.க.வுக்கு தாவ முடிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், கட்சி பிளவுபடும் வாய்ப்பு இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.