பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். நடிகர் குமுளியில் படப்பிடிப்பின் போது தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர்  கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், தவசி படத்தில் "எஸ்க்யூஸ்மி, இவர் அட்ரஸ் தெரியுமா?"என்று வடிவேலுவிடம் பின்லேடன் முகவரி கேட்பவராக நடித்திருந்து அனைவரது மனங்களிலும் நல்லதொரு வரவேற்பை பெற்றார். அத்தோடு, எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலுவை அரிவாளால் மிரட்டுபவராகவும் நடித்திருப்பார்.

இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டது. படப்பிடிப்பு ஒன்றுக்காக, குமுளி சென்றிருந்த இவருக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.

இந்நிலையில்,  மறைந்த கிருஷ்ணமூர்த்திக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். அவருக்கு கோலிவுட் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் கிருஷ்ணமூர்த்தியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.