சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டியதன் காரணமாக நேற்று வியாழக்கிழமை சபை நடவடிக்கைகள் நண்பகல் 12.10 மணியுடன் ஒத்தி வைக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிதி அமைச்சு தொடர்பான பிரேரணையை முன்வைத்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அப்பிரேரணை மீதான உரையை ஆற்றிக் கொண்டிருந்த தருணத்தில் எழுந்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலையால் பல அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். கொழும்பு மாநகர், கடுவெல, கொலன்னாவை போன்ற பகுதிகளிலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தமது பிரதிநிதிகளை எதிர்பார்த்துள்ளனர்.
இதனால் மக்கள் பிரதிநிதிகள் தமது தொகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, சபையை வேளையோடு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கி றேன் என்றார். அதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய ஏனைய உறுப்பினர்கள் உரையாற்ற வேண்டியுள்ளது. அத்தோடு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவெடுப்போம் என்றார்.
எனினும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., அமைச்சர் சரத்பொன்சேகா, பந்துலகுணவர்த்தன எம்.பி. ஆகியோர் உரையாற்றிய பின்னர் சபையை ஒத்திவைக்குமாறு மீண்டும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கோரினார்.
அத்துடன் ஏனைய உறுப்பினர்களையும் குறித்த விடயத்தைக் கூறி சபையை ஒத்திவைப்பதற்கான அனுமதியைக் கோரினார். இதனையடுத்து பந்துல குணவர்த்தன எம்.பி., நாமல் ராஜபக் ஷ எம்.பி. ஆகியோர் தாம் சபையை ஒத்திவைப்பதற்கு இணங்குவதாக கூறினார்கள்.
இந்நிலையில் செல்வம் அடைக்கலநா தன் எம்.பி., அமைச்சர் சரத் பொன்சேகா ஆகியோரின் உரைகளின் நிறைவுக்குப் பின்னர் 12.10 க்கு சபையை ஒத்திவைப்ப தாக சபாநாயகர் அறிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM