(எம்.ஆர்.எம். வஸீம்)

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்திருக்கின்றார். இது அவரின் அரசியல் சானக்கியத்தை எடுத்துக்காட்டுகின்றது என அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.

அத்துடன் கட்சியின் தலைவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதபட்சத்தில், போட்டியிடத கட்சியில் பல சிரேஷ்ட தலைவர்கள் இருக்கின்றனர். அதபோன்று எங்களுடன் இணைந்து செயற்படும் பல கட்சிகள் இருக்கின்றன. அந்த கட்சிகளிடமும் ஆலோனைகளை கேட்டு அவர்களின் நிலைப்பாடை அறிந்த பின்னரே தீர்மானத்துக்கு வரவேண்டிய நிலை எமக்கு இருந்தது. 

எனவே இவர்கள் அனைவரதும் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிக்க தீர்மானித்தார். தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த தீர்மானமானது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான தீர்மானமாகவே அனைவராவும் தற்போது பார்க்கப்படுகின்றது. இதுவே ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் சானக்கியமாகும். என்றார்.

கண்டி ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.