இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் வாணி விழா, எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட் கிழமை மு.ப.10.30 மணிக்கு, இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் A' கட்டடத் தொகுதியின் 6ஆம் மாடியில் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வு, பரீட்சை ஆணையாளர் நாயகம் திரு. பீ. சனத் பூஜித தலைமையில் இடம்பெறவுள்ளதோடு, அனைவரும் விழாவிற்கு வருகை தந்து, முப்பெரும் தேவிகளின் ஆசீர்வாதத்தை பெற்றருளுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்.

அத்தோடு, குறித்த தினத்தில்,  முப்பெரும் தேவியருக்கான பூஜை வழிபாடு, திருமுறையோதுதல், வரவேற்புரை, ஆன்மீக உரை, வயலின் இசை, குழு நடனங்கள், பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் சிறப்புரை, பரிசில் வழங்கல், பிரசாதம் வழங்கள், நன்றியுரை ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.