அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) காலை வேளையில் தனியார் பஸ் கனரக வாகத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 12பேர் காயமடைந்தள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பொத்துவில் நகரில் இருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த தனியார் பஸ் தங்கவேலாயுதபுரம் சந்தியில் கருங்கள் ஏற்றிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கனரக வாகத்தின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றன.

குறித்த கனரக வாகத்தில் பின்புற சில் வெடித்த நிலையில் நிறுத்தி வைக்கப்பபட்டு இருந்துள்ளதாகவும் பொத்துவில் இருந்து பயணிகளை ஏற்றிவந்த தனியார் பஸ் வேககட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன் பஸ்ஸின் முன்பகுதி பாரிய சேதம் அடைந்துள்ளது.

இவ்வித்தினைத் தொடர்ந்த திருக்கோவில் பொலிசாரின் அவசர நோய்காவு வண்டியின் மூலமாக காயமடைந்தவர்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் நிருவாகத்தினர் தெரிவித்து இருந்தனர்.

தனியார் பஸ் மோதி கனரக வாகனம் சுமார் 15அடி தூரம் முன் தள்ளப்பட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.