சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கெதிரானவும் அதனை நிறுத்துமாறு கோரியும் விடுத்து நேற்று மாலை மட்டக்களப்பு நகரில் பெருமளிவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூர்யா மகளிர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஒன்று சேர்ந்த பெண்கள் சவூதி அரசினால் விதிக்கப்பட்டுள்ள கல்லெறிந்து கொல்லுதல் எனும் மரண தண்டனைக் கெதிரான சுலோகங்கள் பலவற்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் விழிப்பூட்டும் துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர்.

பெண்களின் வாழ்வு மற்றும் தொழில் செய்யும் உரிமைகளை சவூதி அரசு மறுக்கிறது. 

இவற்றிற்கெதிராக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.