கனகராயன்குளம் குளத்து அலகரைப் பகுதியில் இருந்து நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஓருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம் குளத்து வேலை செய்பவர்கள் அங்கு சென்ற போது குளத்து அலகரையில் மருந்து குடித்தநிலையில் 65வயது மதிக்கத்தக்க ஒருவர் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர். 

இதனையடுத்து அவர்கள் வழங்கிய தகவலையடுத்து கனகராயன்குளம் இளைஞர்களால் குறித்த நபர் காப்பாற்றப்பட்டு 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நபரை  மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.