மறைந்த இரா. சிவலிங்கத்தின் 20 ஆவது நினைவு தினத்தையொட்டி இன்று மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியின் அதிபர் எஸ். பரமேஸ்வரன் தலைமையில் மஸ்கெலியா சாமிமலை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீமகள் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 5 பேர் கௌரவிக்கப்பட்டனர். 

அந்த வகையில் குறித்த ஐவரில் இருவர் கல்வித் துறையிலும், ஒருவர் சமய துறைக்கும்,மேலும் ஒருவர் எழுத்தாளர் என்ற வகையிலும், விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கலில் வெற்றி கண்ட மலையக மானவ மாணவிகளுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இரா. சிவலிங்கம், முன்னாள் பணிப்பாளர், பி. வேலுசாமி மற்றும் மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபர் என். சச்சுதானந்தன் ஆகியோரின் திரு உருவப்படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் இரா. சிவலிங்கம் ஞாபகார்த்த மன்றத்தின் தலைவர் எம். வாமதேவன், பி. ராமதாஸ் மற்றும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் உரைகள் இடம் பெற்றது.

அத்துடன் இந் நிகழ்வில் முன்னாள் ஓய்வுபெற்ற வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.