இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் இன்றைய தினம் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி லாகூர் மைதானத்தல் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பாமகவுள்ளது.

ஒருநாள் தொடரினை லஹிரு திரமான்ன வழிநடத்தியுள்ள நிலையில் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு - 20 தொடரை இளம் வீரரான தசூன் சானக்க பொறுப்பேற்றுள்ளார்.

சானக்க இறுதியாக நடைபெற்று முடிந்த ஒருநாள் போட்டியில் 7 ஆவது வீரராக களமிறங்கி 24 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 5 நான்கு ஓட்டம் அடங்கலாக அதிரடியாக 43 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.