வவுனியாவில் இன்று இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையால் மக்கள் பதற்றமான நிலையில் காணப்படுகின்றனர்.

இன்று காலை வவுனியா ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற பகுதிகளில் வீதியை மறித்து பரல்கள் அடுக்கி தீவிரமாக மக்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் வவுனியா நகர்ப்புறங்களில் விசேட அதிரடிப்படையினர் மோட்டார் வண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றையதினம் பூந்தோட்டம் மதீனாநகர் பகுதியில் இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நடவடிக்கைகளால் வவுனியாவில் மக்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.