(க.கமலநாதன்)

சீரற்ற காலநிலை காரணமாக மாவனல்லை அரநாயக்க பகுதியில் உள்ள மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தும் அவர்கள் அபாயகரமான பகுதிகளை விட்டுச் செல்லாதிருந்தாலேயே பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளாக தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் மண்சரிவு மற்றும் அவதான எச்சரிக்கை பிரிவின் நிறைவேற்று அதிகாரி ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.

கண்டி ,களுத்துறை கேகாலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் சில பகுதிகள் மண்சரிவு அபாய வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்ட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை காலநிலை மாற்றம் தொடர்பில் விளக்கமளிக்கும்  நோக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.