நிலவை ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திராயன் - 2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்ட கேமரா (ஓ.ஹெச்.ஆர்.சி) மூலம் படம்பிடித்த நிலவின் மேற்பரப்பின் படங்களை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரோ தலைமையகம் தெரிவிக்கையில்,

நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோ மீற்றர் துரத்தில் உள்ள ஆர்பிட்டர் எடுத்த படங்கள்  போகுஸ்லாவ்ஸ்கி  பள்ளத்தின் ஒரு பகுதியாகும், இது சுமார் 14 கிலோ மீற்றர் விட்டம் மற்றும் 3 கிலோ மீற்றர் ஆழம் கொண்டதாக அளவிடப்பட்டுள்ளது. 

இந்த படங்கள் நிலவின் தென் துருவத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ளது.

அத்தோடு குறித்த படங்கள் நிலவின் சிறிய பள்ளங்கள் மற்றும் கற்பாறைகளை காட்டுகின்றது என தெரிவித்துள்ளது.