வவுனியாவில் அகில இலங்கை ரீதியிலான கராத்தே சுற்றுப்போட்டி ஒன்று இன்று இடம்பெற்றது.

நிப்பொன் கன்செக்கே கராட்டி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பம்பை மடுவில் அமைந்துள்ள வவுனியா வளாக உள்ளக விளையாட்டரங்கில் இன்று காலை இடம்பெற்றது.

இவ் கராத்தே சுற்றுப்போட்டியில் நுவரெலியா, கண்டி. கொழும்பு, மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியாவைச் சேர்ந்த கராத்தே மாணவர்கள் இவ் சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றனர்.

சிகான் ஐ.அசனார் சென்சியின் தலைமையில் இடம்பெறும் இச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கு வெற்றிச்சான்றிதழ்களும் பதக்கங்கங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வவுனியா உதவி மாவட்டச் செயலாளர் கமலதாஸன், மற்றும் கராத்தே ஆசிரியர்கள், நடுவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.