கூட்டமைப்பின் நிலைப்பாடு!

Published By: J.G.Stephan

05 Oct, 2019 | 12:58 PM
image

ஐக்­கிய தேசியக் கட்­சி­முன்­வைக்­கவுள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தமிழ் மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்குத் தீர்வு என்ன என்­பதை தெளி­வா­கவும், பகி­ரங்­க­மா­கவும் தெரி­யப்­ப­டுத்த வேண்டும். அப்­போது தான் கூட்­ட­மைப்பு என்ன முடிவை எடுக்க வேண்­டு­மென்­பதை தீர்­மா­னிக்க முடி­யு­மென கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மிக பல­மான அஸ்­தி­ர­மொன்றை பிர­யோ­கித்­துள்ளார்.

ஜனா­தி­பதி தேர்தல் அறி­வித்­தலைத் தொடர்ந்து கட்­சி­களின் பிர­மு­கர்கள் அவரை சந்­தித்த வேளை­க­ளி­ல் எல்லாம் சம்­பந்தன் இவ்­வகை பாணங்­க­ளையே எய்­துள்ளார். சில உத்­தி­யோ­க­பூர்­வ­மான சந்­திப்­புக்­களைச் சில கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் அவர் நடத்­திய வேளை­யிலும் சரி  உத்­தேச சந்­திப்பின் போதும் சரி இக்­க­ருத்­தையே அவர் அடித்துக் கூறி­யுள்ளார்.

குறிப்­பாக அர­சியல் சாணக்­கியன் என்று புக­ழப்­ப­டு­கிற பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்கவையும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்கும் அமைச்சர் சஜித் பிரே­ம­தாசவையும் அண்­மையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்வு என்ன என்­பது தொடர்­பா­கவும் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு ஐக்­கிய தேசியக் கட்சி முன் வைக்­க­வி­ருக்கும் தீர்வு என்ன என்­பதைப் பொறுத்தே ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­பதா இல்­லையா  என்ற தீர்­மா­னத்தை நாம் எடுக்க முடியும்.



தமது நிலைப்­பாட்டை ஒழிவு, மறைவு இல்­லாமல் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளி­வு­ப­டுத்த வேண்­டு­மென தனது உறு­தி­யான நிலைப்­பாட்டை விளக்­கி­யுள்ளார்.

இவ்­வகை நிலைப்­பாடு தொடர்­பாக ஏலவே உத்­தி­யோ­கப்­பற்­றற்ற முறையில் உரை­யா­டப்­பட்ட கட்சி முக­வர்­க­ளி­டமும் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த நிலைப்­பாடு ஓர் இறுக்­க­மான நிலைப்­பாடு மாத்­தி­ர­மன்றி தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் படிப்­பி­னை­யி­லி­ருந்து கோர்த்து எடுக்­கப்­பட்ட முடி­வா­கவும் ஊகிக்க இட­முண்டு.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பங்­காளிக் கட்­சி­யாக தொடர்ந்து செயற்­பட்டு வரும் கட்சி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தனி­நபர் விசு­வா­சத்தின் கார­ண­மாக ரணில் எனும் கயிற்றில் ஆடும் பம்­ப­ரம்போல் செயற்­பட்டு வரு­ப­வர்கள் கூட்­ட­மைப்­பினர் என மாற்­றுத்­த­ரப்­பி­ன­ராலும் எதி­ர­ணி­யி­ன­ராலும் தொடர்ந்து குற்றம் சாட்­டப்­பட்டு வரும் நிலையில் கூட்­ட­மைப்பின் இந்த விடாப்­பி­டி­யான நிபந்­தனை வேட்­பாளர் சஜித்­துக்கும், ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ருக்கும் குறிப்­பாக பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்­க­வுக்கும் ஆச்­ச­ரி­யத்தை மாத்­தி­ர­மல்ல, அதிர்ச்­சியூட்டும் விவ­கா­ர­மா­கவும் மாறி­யி­ருக்­கி­றது.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வேட்­பாளர் தெரி­வுக்­குமுன் ரணில் விக்­­ர­ம­சிங்­க­வையே இவர்கள் வேட்­பா­ள­ராக, ஆக்க வேண்­டு­மென்­பதில் உறு­தி­யா­க­வி­ருந்த கூட்­ட­மைப்­பினர் அதன் கார­ண­மா­கவே யாழ்ப்­பா­ணத்தில் சஜித்தை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மற்ற முறையில் சந்­தித்­து­விட்டு, ”முதிர்ச்­சி­யற்ற ஒரு தலை­வ­ராக காணப்­ப­டு­கிறார் சஜித். அர­சியல் தீர்வு தொடர்பில் அவ­ரிடம் தெளி­வான நிலைப்­பாடு காணப்­ப­ட­வில்­லை­” எனக் கூறி­யி­ருந்­தனர். 

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் தான் சஜித் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இந்த அறி­விப்­புக்குப் பின்பே தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தமிழ்மக்­க­ளுக்­கான தீர்வை முன்­வைக்க வேண்டும். அதைப் பகி­ரங்­க­மாக ஐக்­கிய தேசியக் கட்சி அறி­விக்க வேண்­டு­மென்ற இறுக்­க­மான தனது நிலைப்­பாட்டை கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

கூட்­ட­மைப்பின் குறித்த நிபந்­த­னையை ஐக்­கிய தேசியக் கட்­சியோ அல்­லது அதன் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாசவோ ஏற்றுக் கொண்டு விஞ்­ஞா­ப­னத்தில் வெளிப்­ப­டுத்த முடி­யுமா? அவ்­வாறு வெளிப்­ப­டுத்தும் சார்பு நிலை­யொன்று ஏற்­ப­டு­மாயின் தென்­னி­லங்கை மக்கள் அதை அங்­கீ­க­ரிப்­பார்­களா? அத்­த­கைய சூழ்­நி­லை­யொன்றை உரு­வாக்­கக்­கூ­டிய ஆற்­ற­லு­டை­ய­வ­ராக வேட்­பாளர் வல்­ல­மை­யுள்­ள­வரா? போ-ன்ற பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு மத்­தியில் தான் இப்­பி­ரச்­சி­னைகள் ஆரா­யப்­பட வேண்டும்.

தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மென்­பது ஒரு கட்­சியின் நீண்­ட­கால அர­சியல், பொரு­ளா­தார, சமூக மாற்­றங்கள், வளர்ச்­சிகள் தூர­நோக்கு கொள்­கை­களைத் தொகுத்­துத் ­த­ரு­கின்ற பிர­க­டனம். இப்­பி­ர­க­ட­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே கட்­சி­யொன்றின் கொள்­கை­களும் கோட்­பா­டு­களும் மதிப்­பீடு செய்­யப்­ப­டு­கின்­றன.

இலங்கை அர­சி­யலைப் பொறுத்­த­வரை கட்­சி­களின் விஞ்­ஞா­ப­ன­மென்­பது சமூகம் சார்ந்த நல­னையும் வாக்குத் திரட்டல் நோக்­கத்­தையும் குறிக்­கோ­ளாகக் கொண்டே இலங்­கையில் இடம்­பெற்ற எல்லா தேர்­தல்­க­ளிலும் எல்லாச் சந்­த­ரப்­பங்­க­ளிலும் கட்­சி­களால் தயா­ரிக்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்டு வந்­துள்­ளன.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வெளி­யி­டக்­ கூ­டிய அல்­லது கட்­டியம் சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைத்­து­வங்கள் துணி­கர மற்றும்  தாராள தன்மை கொண்­ட­தாக இது­வரை இருந்­த­து­மில்லை. அதை ஏற்­றுக்­கொள்ளும் மனப்­பக்­குவம் கொண்­ட­வர்­க­ளாக தென்­னி­லங்கை சமூகம் வளர்த்­தெ­டுக்­கப்­ப­ட­வு­மில்லை.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பக்கம் நின்று இவ்­வி­ட­யத்தை நோக்க முற்­ப­டு­வோ­மாயின் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­விக்­கப்­படும் விபரம் அவர்­க­ளுக்கு எத்­த­கைய சவால்­களை உரு­வாக்­கு­மென்று பார்க்க வேண்டும். ஒன்று தமி­ழர்­க­ளுக்­கான தீர்வை முன்­மொ­ழி­வார்­க­ளாயின் அதை தாராள சிந்­தை­யுடன் தென்­னி­லங்கை சமூகம் அங்­கீ­க­ரிக்­குமா என்­பதும் இன்­னொரு புறம் இன­வாத குழுக்­களின் பாரிய சவால்­க­ளுக்கு தாக்­குப்­பி­டிக்க முடி­யுமா என்­பது இன்­னொரு சவா­லா­கவும் மறு­புறம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னே அணி­வ­குத்து நிற்­கின்ற எதி­ர­ணி­யி­னரை வீழ்த்தி வெற்றி கொள்­ளக்­கூ­டிய கள­நிலை, இன்­றைய சூழலில் காணப்­ப­டு­கி­றதா என்­பது.

இதில் முத­லா­வது சவா­லாகக் காணப் ­ப­டு­வது தென்­னி­லங்கை மக்­களின் மனப்­போக்கு. கடந்த 70 வரு­டங்­க­ளுக்கு மேலாக தென்­னி­லங்கை தரப்­பினர் தமிழ்மக்­களின் சுய­நிர்­ணய உரி­மை­யையோ அல்­லது அர­சியல் அதி­காரப் பகிர்­வையோ ஏற்­றுக்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. மிக சின்ன அள­வி­லான குழு­வினர் மனசாட்சியோடு  ஏற்­றுக்­கொண்­டாலும் கணி­ச­மான வீதத்­தினர் எதிர்த்தே வந்­துள்­ளனர்.

குறிப்­பாக 2009ஆம் ஆண்டின் யுத்த வெற்­றிக்­குப்பின் அவர்­க­ளு­டைய மனோ­பா­வங்கள் இனத்­துவ தோர­ணைகள் வலு­வ­டைந்து வந்­துள்­ளதே தவிர நல்­லி­ணக்­கத்­தி­னூ­டான அர­சியல் அல்­லது சமத்­து­வத்­துக்­கான அர­சியல் விட்டுக் கொடுப்­புக்கு அர­சி­யலை அவர்கள் ஏற்­றுக்­கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை. இவ்­வா­றான சூழ்­நி­லையில் விஞ்­ஞா­ப­னத்தில் விளம்­ப­ரப்­ப­டுத்தி தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை சொல்லி வைக்கும் அள­வுக்கு துணிச்சல் கொண்ட அர­சி­யலை இது­வரை ஐக்­கிய தேசி­யக்­கட்சி நடத்திக் கொள்­ள­வில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலை முன்­னிட்டு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் வெளி­யி­டப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்­பான பின்­வரும் பிர­க­ட­ன­மொன்று செய்­யப்­பட்­டி­ருந்­தது.

நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு அனைத்து தரப்­பி­ன­ரதும் ஒத்­து­ழைப்­பு­டனும் இணக்­கப்­பாட்­டு­டனும் ஒற்­றை­யாட்சி முறையின் கீழ் அதி உச்ச அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு செல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஒற்­றை­யாட்சி முறை­மையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு காணப்­ப­டு­மென மேற்­படி விஞ்­ஞா­ப­னத்தில் அறை­கூவல் விடப்­பட்­டி­ருந்­தது. (ஆதாரம் வீர­கே­சரி 24.07.2015). 

இதே­வேளை ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது வெளி­யி­டப்­பட்ட விஞ்­ஞா­ப­னத்தில் தேசிய அர­சாங்­கத்தின் கீழ் தீர்­வுக்கு கொள்கைத் திட்டம் வகுக்­கப்­ப­டு­மென கூறப்­பட்­டி­ருந்­தது. இதே­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அர­சியல் அமைப்பின் 13 ஆவது திருத்­தத்­துக்கு உட்­பட்டு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி சபைகள் ஆகி­ய­வற்றை மேலும் பலப்­ப­டுத்தும் வகையில் அர­சியல் தீர்­வுத்­திட்­ட­மொன்றை காண்­ப­தற்கு ஆறு­மா­தங்­களில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென ஐ.ம.சு.முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவற்றை நோக்­கும்­போது கடந்த காலங்­களில் இடம்­பெற்ற தேர்­தல்­களில் அர­சியல் தீர்வு தொடர்பில் கூறப்­பட்­டி­ருந்த போதிலும் அவை பற்றி எந்­த­ளவு கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. அவற்­றுக்­கான முக்­கி­யத்­துவம் ஏன் இழக்­கப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்­பான வினாக்­க­ளுக்கும் சந்­தே­கங்­க­ளுக்கும் விடை தேடு­வது வீண்­வி­ர­ய­மான பிர­யத்­த­னமே.

மறு­ப­டியும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பான விவ­கா­ரத்­துக்கு வருவோம். வேட்­பா­ள­ராக அறி­விப்­ப­தற்கு முன் தன்னை வேட்­பா­ள­ராக அறி­விக்க வேண்­டு­மென கட்­சிக்கு உள்­ளேயும் வெளி­யேயும் படை பலத்தைத் திரட்டி போராடிக் கொண்­டி­ருந்த அமைச்சர் சஜித் பிரே­ம­தாச இடையில் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­த­போது அர­சியல் தீர்வு தொடர்பில் தனது கருத்தை பதிவு செய்த போது 13 ஆவது திருத்­தத்தை முழு­மைப்­ப­டுத்தும் வகையில் உச்ச அள­வி­லான அதி­கா­ரப்­ப­கிர்வை மேற்­கொள்வதாக  கூறி­யி­ருந்தார்.

அதே சஜித், வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டபின் முதல் செய்­தி­யாக பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் அதி­உச்ச அதி­கா­ரப்­ப­கிர்வை வழங்­கு­வது தனக்கு சுல­ப­மான காரி­ய­மெனக் கூறி­யி­ருந்தார். வேட்­பாளர் தெரி­வுக்­குமுன் அம்­பாந்­தோட்­டையில் நடை­பெற்ற ஓர் ஆத­ர­வாளர் கூட்­டத்தில் பேசும்­போது இவ்­வாறு கூறி­யி­ருந்தார்.

”பௌத்த தேசி­யத்தை பாது­காக்கக் கூடிய ஒரு­வரே இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட வேண்­டும்”­என்று ஆக்­ரோ­ஷ­மாக கூறி­யி­ருந்தார். இது இவ்­வாறு இருக்­கையில் யாழ்ப்­பா­ணத்தில் வைத்து சந்­தித்து உரை­யா­டிய கூட்­ட­மைப்பு தரப்­பினர் அமைச்சர் சஜித்­திடம் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு திட்டம் தொடர்பில் அவ­ரிடம் எந்­த­வொரு தீர்க்­க­மான முடிவும் இருக்­க­வில்­லை­யென கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளனர். இதே­நேரம் வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் கூட்­ட­மைப்பு கவனம் கொள்ளப் போவ­தில்லை. தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு தொடர்பில் என்ன நிலைப்­பாடு கொண்­டுள்­ளார்கள் என்­பது தொடர்­பி­லேயே கூட்­ட­மைப்பு கவனம் செலுத்­து­மென தலைவர் இரா.சம்­பந்தன் கூறி­யி­ருந்தார்.

இவற்­றை­யெல்லாம் ஒப்­பிட்­டுப் ­பார்க்­கையில் பல்­வேறு அபிப்­பி­ரா­யங்கள் உரு­வாகிக் கொண்­டாலும் முடிவு ஒரு புள்­ளியை நோக்­கித்தான் நக­ர­மு­டி­யு­மென்­பதை மிக இல­கு­வா­கவே புரிந்து கொள்ளக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் எத்­தனை தரப்­புகள், எத்தனை கட்­சிகள் போட்­டி­யிட்­டாலும் குறிப்­பிட்ட முக்­கோணப் போட்­டியே பல­மாக இருக்­கப் ­போ­கி­ற­தென்­பதே யதார்த்தம்.

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் போதும் பொதுத் தேர்­தலின் போதும் கூட்­ட­மைப்பு பேரம் பேசும் சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்­டமை மிகப்­பெ­ரிய வர­லாற்றுத் தவறு என்­பது சில புத்­தி­ஜீ­வி­க­ளாலும் தமிழ்த்­த­ரப்­பி­ன­ராலும் கூட்­ட­மைப்பின் மீது முன்­வைக்­கப்­ப­டு­கிற குற்­றச்­சாட்டு. இது பிற்­கா­லத்தில் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளா­கவும் உரு­வெ­டுத்திருந்தது. எழுத்து மூல உறு­தி­யொன்றை பெறு­வ­தற்கு கூட்­ட­மைப்பு தவ­றி­விட்­டது.

இதுவே கடந்த காலங்­களைப் போல் ஏமாற்­றத்­துக்­கான மூல­கா­ர­ண­மாக போய் விட்­டது என்­பது கூறப்­பட்­டாலும் அவ்­வா­றா­ன­தொரு நிபந்­த­னையின் அடிப்­ப­டையில் யாரை நிறுத்­தி­னாலும் மஹிந்த ஆட்­சியை வீழ்த்­து­வது என்­பது பகற்­க­ன­வா­கவே போய்­விடும். அதன் கார­ண­மா­கவே ஜனா­தி­பதித் தேர்­தலின் போதோ அல்­லது பொதுத் தேர்­தலின் போதோ அத்­த­கைய நிபந்­த­னை­களை விதிக்க விரும்­ப­வில்­லை­யென இரா.சம்­பந்தன் தெரி­வித்­தி­ருந்தார்.

2015 ஆம் ஆண்டில் எழுத்து மூல உத்­த­ர­வா­தத்தை கோராத கூட்­ட­மைப்பு இன்­றைய தேர்­தலில் எழுத்து மூல வடி­வத்­துக்கு முக்­கி­யத்­துவம் தராமல் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்ற புதிய தந்­தி­ர­மொன்­றுக்குள் நுழைந்­தி­ருக்­கி­றார்கள் என்று கூறப்­ப­டு­கி­றது. இதன் அர்த்தம் யாதெனில் ஒப்­பந்­தங்கள் உடன்­ப­டிக்­கைகள் தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் தவ­றான அர்த்­தப்­பா­டு­க­ளையும் வியாக்­கி­யா­னங்­க­ளையும் கொண்டு வரலாம். பதி­லாக விஞ்­ஞா­ப­ன­மென்­பது பத்­தோடு பதி­னொன்­றாக பர­க­சி­ய­மில்­லா­மலே போய்­விடும் என்­ப­தற்­கா­கவே இவ்­வா­றா­ன­தொரு உத்தி பயன்­ப­டுத்­தப்­ப­ட­லா­மென்­பது சில­ரு­டைய அபிப்­பி­ரா­ய­மாக இருக்­கி­றது.

ஒப்­பந்­தங்கள், உடன்­ப­டிக்­கைகள் ஆவண வடிவம் பெறு­பவை, மீறப்­ப­டும்­போது அது பற்­றிய பெறு­ம­தி­களும் வெளிக்­கொண்டு வரப்­ப­டு­கின்­றன. ஆனால் விஞ்­ஞா­ப­னத்தைப் பொறுத்­த­வரை அது ஒரு பட்­ட­யமே தவிர அதில் கூறப்­பட்­டவை நிறை­வேற்­றப்­ப­டலாம். முடி­வு­ப­டுத்­தப்­ப­டாமல் போகலாம் அல்­லது மீறப்­ப­டலாம் என்­பது பொது­வாக தரப்­படும் விளக்­கம்.­ இந்த இலக்­க­ணத்தை அடிப்­ப­டை­யாக வைத்துப் பார்க்­கும்­போது தேர்தல் விஞ்­ஞா­பனம் ஒரு கன­தி­யற்ற ஆவ­ண­மாக இல்­லாது இருந்­தாலும் சகல மக்­களும் தெரிந்து கொள்­ளக்­கூ­டிய ஆவணம் என்ற வகையில் இக்­கோ­ரிக்கை பெறு­மதி கொண்­ட­தாக இருக்­க­லா­மென ஊகிக்­கப்­ப­டு­கி­றது.

அந்த வகையில் ஜனா­தி­பதி தேர்தல் களத்தில் முன்­னணிப் போட்­டி­யா­ளர்­க­ளாக காணப்­ப­டு­வோர், மக்கள் விடு­தலை முன்­னணி வேட்­பாளர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க, ஐக்­கிய  தேசிய முன்­னணி வேட்­பா­ள­ராக அமைச்சர் சஜித் பிரே­ம­தாச, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ என்­போரே.  

போட்­டி­யிடும் கட்­சிகள் தாம் வெற்றி பெறும் பட்­சத்தில் எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். சிறு­பான்மை சமூ­கங்கள் தொடர்­பாக எவ் ­வகை தீர்­மா­னங்­க­ளுக்கு வருவோம் என் ­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை வெளி­யிடும் என எதிர்­பார்க்கும் நிலை­யில்தான் கூட்­ட­மைப்பின் நிபந்­த­னையும் எதிர்­பார்ப்பும் முன்­கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. இதில் கூட்­ட­மைப்பின் ஆத­ரவை குறிப்­பாக வட­– கி­ழக்கு மக்­களின் ஆத­ரவை எல்லாக் கட்­சி­களும் எதிர்­பார்த்து நின்­றாலும் கூட்­ட­மைப்பு எடுக்­க­வி­ருக்கும் தீர்­மானம் இம்­முறை வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்­கலாம்.

அவ்­வ­கையில் தமிழ்மக்­களின் வாக்­கின்­றியே தம்மால் வெற்றி கொள்ள முடி­யு­மென தம்­பட்டம் அடித்­து­வரும் பொது­ஜன பெர­முன வேட்­பா­ள­ருக்கு கூட்­ட­மைப்பு எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தனது ஆத­ரவை நல்­கு­மென்று எதிர்­பார்க்க முடி­யாது. அவ்­வா­றா­ன­தொரு நிலை அல்­லது மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்கு எந்­த­வொரு சந்­தர்ப்­பமும் இருக்க முடி­யாது. இதற்­கு­ரிய வர­லாற்றுப் பின்­ன­ணி­யையும் யதார்த்­தத்­தையும் புரிய வைக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. கூட்­ட­மைப்பு அத்­த­கை­ய­தொரு தீர்­மா­னத்­துக்கு வரு­வதை தமிழ்மக்கள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. சில ஊதா­ரித்­த­ன­மா­ன­வர்கள், ”மறப்போம், மன்­னிப்போம், கோத்­தாவை ஆத­ரிப்போம்” என கூறிக் கொண்­டாலும் அத்­த­கை­ய­தொரு மாற்றமுடிவை கூட்­ட­மைப்பின் தலை­மையோ அன்றி தமிழ்மக்­களோ எடுக்­கப்­போ­வ­தில்லை. அந்த வர­லாற்று தவறு நடை­பெற வாய்ப்­பில்லை.

முள்­ளி­வாய்க்கால் இறு­திப்போர் அழிப்­புக்கள் சர­ண­டைந்­தோரின் நிர்க்­கதி காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் மர்­மத்­து­லக்­கங்கள், போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள், மனித உரிமை மீறல்கள், கடத்­தப்­பட்டோர், பாவ விமோ­சனம் என ஏகப்­பட்ட குற்­றப்­பத்­தி­ரங்­களின் மத்­தியில் கள­மி­றங்­கி­யி­ருக்கும் வேட்­பா­ள­ருக்கு கூட்­ட­மைப்பு தனது ஆத­ரவை வழங்­கப்­போ­வ­தில்லை என்­பது வெளிப்­ப­டை­யான உண்மை.

மறு­பு­றத்தே தலை­தூக்கி நிற்கும் வேட்­பாளர் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி இயக்க வேட்­பாளர் அனுர. இக்­கட்­சியின் வளர்ச்­சியும் மாற்­றமும் ஆச்­ச­ரியம் கொண்­ட­தாக பார்க்­கப்­பட்­டாலும் இவர்­களை ஆத­ரிக்கும் தோர­ணைக்கு கூட்­ட­மைப்பு வருமா என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரிய விடயம். இதில் இரு கார­ணங்கள் முக்­கியம் பெறு கின்­றன. ஒன்று இடது சாரிக் கொள்­கை­யுடன் ஒட்டி வளர்த்­தெ­டுக்­கப்­பட்டு வரும் மக்கள் முன்­ன­ணியை ஆத­ரிக்கும் கொள்கை ரீதி­யான வளர்ச்­சியை ஆத­ரிக் கும் அள­வுக்கு அவர்கள் வளர்த்­தெ­டுக்­கப்­ப­ட­வு­மில்லை. அவ்­வகை மாற்­றங்­களை கைநீட்டி வர­வேற்கும் அர­சியல் அறிவு மாற்­றங்கள் இன்னும் நடந்­து­வி­ட­வு­மில்லை.

மறு­கா­ரணம் ஜே.வி.பி.யினர் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் வட –­ கி­ழக்கு மக்­களின் சுய­நிர்­ணய உரி­மையை ஏற்­றுக்­கொண்டு அவர்­க­ளுக்­கான அதி­காரப் பகிர்வு இவ்­வாறு தான் இருக்க வேண்­டு­மென வெளிப்­ப­டை­யாக கூறி­யதில்லை. இது முன்னாள் தலைவர் ரோஹண விஜ­ய­வீர காலத்­தி­லி­ருந்து இன்­றைய தலைவர் காலம்வரை இடம்­பெற்­ற­தாகத் தெரியவில்லை. அதுவுமன்றி இடையில் வந்த தலைமைகளின் இனத்துவமான கொள்கைகள் பிரசாரங்கள் தமிழ்மக்களை வெறுப்படைய வைத்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுவுமின்றி ஜே.வி.பி.யின் புதிய தலைமைகள் கூட தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தெளிவான, ஆழமான அரசியல் தீர்வுபற்றி வெளிப்படையாகவும் துணிவுடனும் கூறியது கிடையாது. அதுவுமின்றி வட–கிழக்குப் பிரிப்பின் சூத்திரதாரிகள் இவர்கள் என்ற வடுவி லிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத நிலையை மாற்றும் முயற்சிகளை இவர்கள் மேற்கொள்ளாதவரை தமிழ்மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே. 

கூட்டமைப்பினால் தீர்மானத்துக்கு வரக்கூடிய ஒரேயொரு கட்சியாக ஐ.தே.கட்சியும், வேட்பாளர் சஜித் பிரேமதாச வுமே காணப்படுகிறார்கள். இந்த முக்கூட்டாளர்கள் மத்தியில் தெரிவு செய்யக்கூடிய ஒரேயொரு வேட்பாளராக காணப்படுபவர் சஜித். ஆனால் இவர் மீது எந்தளவு நம்பிக்கை கொள்ள முடியும்? இவர் இனப்பிரச்சினை தீர்வு குறித்துக்  கொண்டிருக்கும் அபிப்பிராயம் தொடர்பில் பெருத்த நம்பிக்கை கொண்டவர்களாக கூட்டமைப்பு காண

ப்படவில்லை என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதைத் தவிர மாற்றுத்தேர்வு ஒன்றுக்குச் செல்லும் வழிமுறைகள் இல்லையென்பதும் வெளிப்படையே. இது இவ்வாறு இருக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாரும் எதிர்பார்க்காத தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கு மென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி தெளிவான முடிவுக்கு வரமுடி யாவிட்டாலும், கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பான முடிவை எடுக்கும் சாத்தியமே அதிகம் காணப்படுகிறது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்த லின்போது வட–கிழக்கு மக்கள் ஒதுங்கியிருந்ததைப் போல் ஒரு சூழ்நிலை இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வரப்போவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ ஒரு முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டுமென்ற நிலையில் என்ன முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரப்போகிறதென்பது விரைவில் தெரிந்து விடும்.

திரு­மலை நவம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04