இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு ‘தக்கு முக்கு திக்கு தாளம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல் ,சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட பல படங்களை இயக்கி, இரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனரும், நடிகருமான தங்கர்பச்சான். இவர் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘தக்கு முக்கு திக்கு தாளம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

 இந்தப்படத்தில் அவரது வாரிசு விஜித் பச்சான் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மிலானா நாகராஜ், அஸ்வினி சந்திரசேகர் என இரண்டு நடிகைகள் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நடிகர் முனீஸ்காந்த், மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பி எஸ் என் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, தரண் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் வடபகுதி மண்ணின் மணத்தை திரையில் கமழச் செய்த இயக்குனர் தங்கர்பச்சான், தன்னுடைய தக்கு முக்கு திக்கு தாளத்தை நகர பின்னணியில் அமைந்த காதல் கதையாக உருவாக்கவிருக்கப்பதாக தெரிவிக்கிறார்கள் அவருடைய குழுவினர்.