வவுனியா, பூந்தோட்டம் மதீனாநகர் சந்தியில் நேற்றையதினம் காலை புதிதாக இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மதீனாநகர் பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் ஒரு சில வீடுகளில் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் குறித்த சோதனை சாவடி நேற்றையதினம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வீதியால் பயணிக்கும் ஒரு சில வாகனங்கள் பதிவு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது குறித்த பகுதியில் இராணுவ சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. பின்னர் அது அகற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த சோதனை சாவடி அவ்விடத்தில் மீண்டும் அமைக்கப் பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
கடந்த வாரமும் பம்பை மடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM