இலங்கை தானாக முன்வந்து வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நாங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணும் கொள்கையில் உறுதியாக உள்ளோம்.

இலங்கையின் புவிசார் அமைவிடத்தை கருத்தில்கொள்ளும்போது  எங்களது வெளிவிவகார கொள்கை அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கும் 

இலங்கையை அறிவை அடிப்படையாக கொண்ட போட்டித்தன்மை கொண்ட  சமூக சந்தை பொருளாதாரத்தை கொண்ட இந்து சமுத்திரத்தின் தளமாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.

இந்த நோக்கத்திற்கு திறந்த பொருளாதாரம்,கடற்பயண சுதந்திரம்,ஒழுங்குவிதிகளை அடிப்படையாக கொண்ட உலக அமைப்பு ஆகியன அவசியமானவை.

இலங்கை இந்த கொள்கைகளில் உறுதியாகயிருக்கும்.

இலங்கை ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை வர்த்தக உறவுகளை மக்களிற்கு இடையிலான வலுவான உறவுகளை கொண்டுள்ள நாடுகளுடன்  நாங்கள் நெருக்கமாக இணைந்து செயற்படுவோம்.

இந்துசமுத்திரத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள நாடுகளுடன் வலுவான புதிய உறவுகளை ஏற்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மேற்கு கடற்பயணத்தில் எங்களது அமைவிடத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் .நாங்கள் அனைத்து நாடுகளுடனும் பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய அர்த்தபுஸ்டி மிக்க ஆக்கபூர்வமான இணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புகின்றோம்.

 நல்லிணக்கம் ஸ்திரதன்மை மற்றும் அமைதியில்லாமல் பேண்தகு பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்யமுடியாது என்பது வெளிப்படையாக தெரிகின்ற  விடயம் என.

கடந்த சில வருடங்களாக இலங்கையில்  நல்லிணக்கத்தையும் சட்டத்தின் ஆட்;சியையும்,மனித உரிமை ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காயங்களை ஆற்றும்,  நல்லிணக்கம் ஜனநாயகம் அபிவிருத்தி என்பன காணப்படும் இலங்கை என்ற  எங்கள் நோக்கை நோக்கி நாட்டை முன்னேற்றகரமான பாதையில் செலுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளன.

நவீன நிலையான வளமான தேசமாக மாறுவதற்காக எங்கள் முழு திறனையும் பயன்படுத்துவதற்கு எங்கள் நாடு பல்லின ,பலமொழி பலமதங்களை நாடு என்பதை அங்கீகரித்து கொண்டாடுவது அவசியம்.

தனிநபர் சுதந்திரம் மற்றும் கௌரவத்தை உறுதி செய்வது அவசியம்.

இலங்கை தானாக முன்வந்து வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம்