(மயூரன் )

யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

அல்வாய் கிழக்கு வெள்ளூர் பகுதியை சேர்ந்த இராசநாயகம் அஜந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் தொலைக்காட்சி பொட்டிக்கு மின்சார இணைப்பு வழங்கிய போதே மின்சார தாக்குதலுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.