வனபாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஐப்பசி மாதம் அளவில் மேற்கொள்ளப்படுகின்ற வன ரோபா நிகழ்வானது வவுனியா மாவட்ட நெடுங்கேணி வட்டார வன அலுவலகத்தினால் இந்த வருடம் நெடுங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்திற்குட்பட்ட மருதங்குளத்தில் நீரேந்து பிரதேசத்தில் நேற்று மரநடுகை நிகழ்வானது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மருத மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக நெடுங்கேணி உதவி பிரதேச செயலாளர்,வவுனியா மாவட்ட கமநல சேவைகள் பிரதி பணிப்பாளர், நெடுங்கேணி வட்டார வன அதிகாரி,வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர், வவுனியா வடக்கு பிரதேச சபை செயலாளர், நெடுங்கேணி கிராமசேவையாளர், நெடுங்கேணி மகா வித்தியாலய அதிபர், மாணவர்கள், கமநல சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

இலங்கை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.