களினி ஆற்றின் நீர்மட்டம் 7.3 அடியாக உயர்ந்துள்ளதால்  வீடுகள் நீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து கொண்டே செல்வதால் அபாய நிலைமையை எட்டியுள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது.

Pics By: J.Sujeewakumar