மட்டக்களப்பு மாவட்டத்திலும் வைத்தியதிகாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் தூர இடங்களிலிருந்து வந்த நோயாளர்கள் திரும்பிச்சென்றதையும் அவதானிக்கமுடிந்தது.

மாவட்டத்தின் பெரும்பாலான வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(ஜவ்பர்கான்)