யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவனான சிற்றம்பலம் நிதியத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தைச் சிற்றம்பலத்தின் பேரனான சஞ்சீவ் சிற்றம்பலம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தலைமையில் நடைபெற்ற கட்டட திறப்பு விழாவில் கல்லூரியின் முன்னாள் அதிபரும் தற்போதைய யாழ் மறைமாவட்ட ஆயருமான ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்ட், வைத்திய கலாநிதி ராஜேந்திரா உட்பட கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.