ரயில் ஊழி­யர்­களின் போராட்­டத்தின் பின்­ன­ணியில் எதி­ர­ணி­யினர் - மங்கள

By R. Kalaichelvan

04 Oct, 2019 | 10:19 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

புகை­யி­ரத ஊழி­யர்­களின் கோரிக்­கைகள் அனைத்தும் நிறை­வேற்­றப்­பட்­டுள்ளன. அர­சியல் நோக்­கங்­களைக் கருத்திற் கொண்டே தொழிற்­சங்­கங்கள் முறை­யற்ற விதத்தில் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றன என நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

போராட்­டத்தின் பின்­ன­ணியில் எதி­ர­ணி­யி­னர் உள்­ளார்கள் என்­பதை பெயர், விப­ரங்­க­ளுடன் ஆதா­ரத்­துடன் வெளிப்­ப­டுத்­துவேன். பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­யா­ணி­களின் நலன் கருதி மாற்று நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்  என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நிதி­ய­மைச்சில் நேற்று இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

புகை­யி­ரத தொழிற்­சங்­கத்­தினர்  கடந்த காலங்­களில் முன்­னெ­டுத்த தொடர்ச்சியான பணிப்­பு­றக்­க­ணிப்பு நட­வ­டிக்கை­களைத் தொடர்ந்து அனைத்து அரச ஊழி­யர்­க­ளுக்கும்  காணப்­படும் சம்­பளப் பிரச்­சி­ னைக்குத் தீர்வு காணும் விதத்தில் ஜனா­தி­ ப­தியால் பிரத்­தி­யேக குழு நிய­மிக்­கப் ­பட்­டது.

குழு­வினால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட அறிக்­கையின் பிர­கா­ரமே அனைத்து அரச ஊழி­யர்­களின் கொடுப்­ப­னவும் அதி­க­ரிக்­கப்­படும். 

சம்­பள விவ­கா­ரத்தில் புகை­யிரதத் தொழிற்­சங்­கத்­தினர் முன்­வைக்கும் கோரிக்­கைகள் நியா­ய­மற்­ற­வையாகும். இவர்­களின் கோரிக்­கைகளை நிறை­வேற்றும் பட்­சத்தில்  ஏனைய அரச ஊழி­யர்கள் பாதிப்­ப­டை­வார்கள். ஆகவே ஒரு­ த­லைப்­பட்­ச­மாக  செயற்­பட முடி­யாது.

புகை­யி­ரதத் தொழிற்­சங் ­கத்­தி­ன­ரது  கோரிக்­கை கள் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட்டு அவர்­களின் சம் ­பளம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஜன­வரி மாதம் முத­லாம் திக­தியிலிருந்து குறித்த சம்­பள அதி­க­ரிப்பு அமுல்­ப­டுத்த அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கியுள்­ளது.

தேர்தல் இடம்பெற­வுள்ள தரு­ணத்தில் புகை­யி­ரதத் தொழிற்­சங்­கத்­தினர் அரசியல் நோக்­கங்­களை கருத்திற்கொண்டே போராட் டங்­களை முன்­னெ­டுத்­துள்ளார்கள். இதன் பின்­ன­ணியில்  எதிர்த்தரப்­பி­னர்களே உள்­ ளார்கள். முகப்புத்தகத்தில் தொழிற்­சங்­ கத்தின் உறுப்­பி­னர்கள் சிலர் தகவல் பரி­மாறிக் கொண்­டுள்­ளமை தற்­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே போராட்­டத்தின் உந்துசக்தி யார் என்­பதை பெயர் விப­ரங்­க­ளுடன் பகி­ரங்கப்­ப­டுத்­து வேன். புகையிரத சேவையில் பருவகாலச் சீட்டு (சீசன் அட்டை) பயன்படுத்தும் பயணிகள் பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு நிச்ச யம் மாற்று வழிமுறைகளில் நிவாரணம் வழங்கப்படும். நாட்டு மக்கள் உண்மை யைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34