502 ஓட்டங்களை குவித்த இந்தியா ; தடுமாறுகிறது தென்னாபிரிக்கா

By Vishnu

03 Oct, 2019 | 09:52 PM
image

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 இருபதுக்கு -20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இருபதுக்கு - 20 தொடர் ஏற்கனவே சமனிலையில் முடிய, இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 154 பந்துகளை எதிர்கொண்டு தனது சதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் சர்மாவுடன் களம் இறங்கிய மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 

59.1 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்தால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். 

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, விக்கெட் இழப்பு ஏதுமின்றி 202 ஓட்டங்களை எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 84 ஓட்டத்துடனும் ரோகித் 115 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் சதம் விளாசினார். அவர் 204 பந்துகளை சந்தித்து இரண்டு ஆறு ஓட்டம், 13 நான்கு ஓட்டம் உதவியுடன் இந்த சதத்தை அடித்தார்.

பின்னர் அடித்து ஆடத் தொடங்கிய ரோகித் சர்மா 176 ஓட்டத்துடன், கேசவ் மகராஜ் பந்தில் விக்கெட் காப்பாளர் டிகொக்கால் ஸ்டம் செய்யப்பட்டார். அடுத்து வந்த புஜாரா, நிலைத்து நிற்பதற்குள்ளாகவே பிலாண்டர் பந்துவீச்சில் ஆறு ஓட்டத்துடனும் போல்ட் ஆனார். 

பின்னர் வந்த விராட் கோலி, மயங்க் அகர்வாலுடன் இணைந்து ஆடினார். கோலி, 20 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது முத்துசாமி வீசிய பந்தில், அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ரஹானே, மயங்க் அகரவாலுடன் இணைந்தார். ரஹானே நிதானமாக ஒரு பக்கம் ஆட, மறுமுனையில் மயங்க் அகர்வால் அடித்து ஆடத் தொடங்கி, அபாரமாக ஆடி இரட்டை சதம் விளாசினார். 

இதையடுத்து இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 430 ஓட்டங்கள் எடுத்தது. இந் நிலையில் ரகானே 15 ஓட்டத்துடன் மகராஜ்ஜின் பந்து வீச்சில் பவுமாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த அகர்வால் 6 ஆறு ஓட்டம், 23 நான்கு ஓட்டம் அடங்கலாக 215 ஓட்டத்துடன் எல்கரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய 457 ஓட்டத்துக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது. இதன் பின்னர் களமிறங்கிய விஹாரி 10 ஓட்டத்துடனும், விருத்திமான் சஹா 21 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக இந்திய அணி மொத்தமாக 136 ஓட்டங்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்த நிலையில் 502 ஓட்டங்களை பெற்றதுடன் முதல் இன்னிங்ஸிக்கான ஆட்டத்தையும் நிறுத்திக் கொண்டது.

ஜடேஜா 30 ஓட்டத்துடனும், அஷ்வின் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 39 ஓட்டங்களை பெற்றது.

மக்ரம் 5 ஓட்டத்துடனும், தியூனிஸ் டி ப்ரூயின் 4 ஓட்டத்துடனும், டேன் பீட் டக்கவுட்டுடனும் ஆட்டமிழக்க எல்கர் 27 ஓட்டத்துடனும், பவுமா 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18
news-image

சாதனைகள் நிலைநாட்டி வெற்றியீட்டிய கண்டி ஃபெல்கன்ஸ்

2022-12-07 09:41:16
news-image

பெனல்டியில் ஸ்பெய்னை வென்ற மொரோக்கோ கால்...

2022-12-06 23:45:38
news-image

போர்த்துக்கல் - சுவிட்சர்லாந்து மோதும் போட்டியுடன்...

2022-12-07 10:09:53
news-image

எல்பிஎல் 3ஆவது அத்தியாயத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது...

2022-12-06 19:27:29
news-image

மொரோக்கோவை 16 அணிகள் சுற்றில் இன்று...

2022-12-06 19:28:13
news-image

ஜெவ்னா கிங்ஸ் - கோல் க்ளடியேட்டர்ஸ்...

2022-12-06 15:26:45