பிரான்ஸ் தலைநகர் பாரிசின் காவல்துறை தலைமையகத்தில் காவல்துறையினரை கத்தியால் குத்த முயன்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காவல்துறை தலைமையக கட்டிடத்திற்குள் நுழைந்த நபர் அங்கிருந்த காவல்துறையினரை தாக்க தொடங்கினார் என தகவல்கள் வெளியாகின்றன.

இதனை தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்த தாக்குதலிற்கான காரணம் உட்பட ஏனைய விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

பல காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன