(செ.தேன்மொழி)

கொள்ளுப்பிட்டி பகுதியில் நிதி நிலையமொன்றின் ஊழியர் என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு நிதி மோசடியில் ஈடுப்பட்ட சந்தேக நபரொருவரை அடையாளம் காணுவதற்கு பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் உதவி கோரியுள்ளது.

கடந்த மாதம் 17 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி நிதி நிலையமொன்றினால் மீட்டு வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்குடன் வருகைத்தந்திருந்த நபர்களை ஏமாற்றி சந்தேக நபரொருவர் நிதி மோசடியில் ஈடுப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் போது தன்னை குறித்த நிறுவனத்தின் ஊழியர் என அடையாளப்படுத்திக் கொண்டுள்ள சந்தேக நபர் ,அந்த நபர்களிடமிருந்த 40 இலட்சம் ரூபாய் பணத் தொகையை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சி.சி.ரி.வி காணோளி காட்சிகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை அடையாளம் கண்ட பொலிஸார் அரை கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவியை கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதற்கமைய சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 011-2673581, 011-2675651 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொண்டு கொழும்பு மோசடி விசாரணை பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலை தெரிவிக்க முடியும் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது