வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக போராடிவரும் நிலையில் அவர்களுக்கு நியமனம் தொடர்பாக தீர்வுதராத நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்க போவதாக தெரிவித்து. மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் நேற்று (02.09.2019) வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் உட்பட நூற்றுக்கணக்காண வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது அரச நியமனம் கோரி கடந்த 2015 தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்ணாவிரதம் மற்றும் வீதியோரப் போராட்டங்களை மேற்கொண்டு வந்தோம் ஆனால் இதுவரைக்கும் எமக்கு ஒழுங்கான நியமனங்கள் கிடைக்கவில்லை.
2019 ஆம் ஆண்டு வரைக்கும் இதுவரை பட்டதாரிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த ஆண்டு நியமனங்களை வழங்கியிருந்தால் இவ்வாறு வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்திருக்க முடியாது.
எனவே இந்த அரசாங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எங்களுக்கான அரச நியமனங்களை தரவேண்டும் அல்லது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கட்சிகள் எமது இந்த கோரிக்கைக்கு எழுத்து மூலமான உத்தரவாதத்தை வழங்க முன்வருவோக்கு நாங்கள் எமது வாக்குகளை வழங்குவோம் .
இந்த கோரிக்கையை எந்த கட்சியும் ஏற்காவிடில் நாங்கள் ஜனாதிபதி தேர்தல் மட்டுமல்ல எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் உட்பட அனைத்து தெர்தலையும் புறக்கணிப்போம் நாடளாவிய ரீதியில் 25 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதுடன் சுமார் ஒரு இலச்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை புறக்கணிக்க நேரிடும் என தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM