இரவு முழுதும் கைதொலைபேசியில் “வீடியோ கேம்” விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தாய்லாந்தின் சோன்பூரியில் இடம்பெற்றுள்ளது.

25 வயதான சாஸ்த்ரா மோஹின் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

 

    

இணையத்தள விளையாட்டுக்களில் அதீத ஆர்வமுடைய குறித்த இளைஞர், பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு தனது கைத்தொலைபேசியை மின்னிணைப்புடன் பொருத்தியவாறு வீடியோ கேம் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதன் போது ஏற்பட்ட அதிக மின்ஏற்றம் காரணமாக உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

மறுநாள் காலை அறைக்குச்சென்ற அவரது உறவினர்,  குறித்த இளைஞனின் உடல் ஊதா நிறமாக மாறியிருந்தால் அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன் அவரது இடது கை தீகாயங்களுடன்  மின்இணைப்புக்கு அருகில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் இது போன்று தனது வீட்டின் அறையில் கைத்தொலைபேசியை சார்ச்சில் இணைத்தப்படியே பாடல் கேட்டுகொண்டிருந்த 14 வயது மாணவியொருவர்  மரணமான சம்பவம்  கசகஸ்தான் நாட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.