கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று விபச்சார விடுதி ஒன்றை சுற்றிவளைத்தபோது,  சந்தேக நபர்களான 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மஹர நீதவான் நீதிமன்றில் இருந்து பெற்றுக்கொண்ட சோதனை உத்தரவுக்கமைய இந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டது. இதன் போது முகாமையாளரான பெண் ஒருவர் உட்பட, பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கருதப்பப்டும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு , பதவிய மற்றும் கிதெல்கொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 22, 26 மற்றும் 35 வயதானவர்களாவர். இது தொடர்பில் கிரிபத்கொட பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று விபச்சார விடுதி ஒன்றை சுற்றிவளைத்து சந்தேக நபர்களான 3 பெண்களை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட சோதனை உத்தரவுக்கமைய இந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு முகாமையாளர் பெண் ஒருவரும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் களனி, கடவத்த மற்றும் மதுரங்குளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 26, 32 மற்றும் 40 வயதானவர்களாவர். இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.