தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 135 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மோடி தனது டுவிட்டரில், "சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

நண்பகல்  12மணி நிலைவரப்படி அ.தி.மு.க. கூட்டணி 130 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி 95  தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.