இரண்டு பக்க மூளையும் சிறப்பாக செயற்பட வேண்டுமா...?

Published By: Daya

03 Oct, 2019 | 02:12 PM
image

பாடசாலையில் பயிலும் மாணவர்கள் முதல் அலுவலகம் செல்லும் குடும்பத் தலைவர் உள்ளிட்ட மூத்தவர்கள் வரை நினைவுத்திறன் விடயத்தில், சென்ற தலைமுறையைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. நாம் மூளையை பயன்படுத்துவதிலும், செயற்படுத்துவதிலும் போதிய அளவிற்கு முக்கியத் துவம் கொடுக்காததால் நினைவு திறன் இழப்பு அதிகமாக ஏற்படுகிறது என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

இதற்கு எம்மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதை காட்டிலும், மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதிலும் நினைவுத்திறனை பராமரிப்பதிலும் முக்கிய இடத்தை உடற்பயிற்சி பிடிக்கிறது என்கிறார்கள். நீங்கள் நாளாந்தம் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக சுரக்கும் சுரப்பிகள் மூளையை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. அதேபோல்எட்டு மணி நேர உறக்கத்தையும் நீங்கள் உறுதி செய்தால் மட்டும்தான் உங்களது நினைவுத்திறன் சேமிப்பு அதிகரிப்பதுடன் இரண்டு பக்க மூளையின் செயல்பாடுகளும் இயல்பான அளவில் நடைபெறும்.

எம்முடைய இடது பக்க மூளை பகுத்தறிவு, மொழியறிவு, எண்கள் தொடர்பான நுட்பங்கள் என பல விடயங்களை சேமித்து பராமரிக்கிறது. வலது பக்க மூளை கற்பனைத்திறன், இசையறிவு, படைப்புத்திறன், மனோசக்தி உள்ளிட்டவற்றை சேமித்து பராமரிக்கிறது. இவ்விரண்டு பக்க மூளைகளும் சீராக செயற்பட்டால் தான் உங்களுக்கு நினைவு திறன் இழப்பு ஏற்படாமல் இருக்கும். அத்துடன் சுறுசுறுப்பாகவும் சமயோசிதமாகவும் இயங்க முடியும்.

இதற்கு வைத்தியர்கள் சில எளிய பயிற்சிகளை பரிந்துரைக்கிறார்கள்.  இதுவரை நீங்கள் காலையில் எழுந்தவுடன் வலது கையால் பல் துலக்கு வீர்கள். அதனை வலது கையால் செய்து முடித்தவுடன், இடது கையாலும் பிரஷ் கொண்டு பல் துலக்க வேண்டும். அதேபோல் வலதுகையால் சீப்பை கொண்டு தலை முடியை அலங்கரிப்பது போல், இடது கையாலும் தலை முடியை சீப்பு கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

வலதுகையால் எழுதுவதைப் போல், இடது கையாலும் எழுதும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஸ்பூனைக் கொண்டு வலதுகையால் உணவு உட்கொள்வதுபோல், இடது கையாலும் ஸ்பூனை கொண்டு உணவை உட்கொள்ளவேண்டும். இது போன்ற சில எளிய பயிற்சிகளை மேற்கொண்டால் இரண்டு பக்க மூளைகளும் சீரான அளவில் தூண்டலை பெற்று, ஆரோக்கியமாக ஆயுள் முழுவதும் இயங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49