பொரளை, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசலைகளுக்கும், ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளுக்கும் 7 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் இறுதித் திகதி 7 ஆம் திகதி என்பதனை கருத்திற்கொண்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.கே ரணசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளினை கருத்திற்கொண்டே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.