முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான லெப்ரினன்ட் கொமாண்டர் யோஷித்த ராஜபக்ச இன்றையதினம் நிதீஷாவை கரம்பிடித்தார்.

இந்த திருமண நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

பிரபல வர்த்தகரான ஆனந்த ஜெயசேகரவின் மகளையே யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் கரம்பிடித்தார்.

இந்த திருமண வைபவத்தில் அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இருவருக்கும் ஏற்கெனவே திருமணப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையிலேயே இன்றைய தினம் இருவரும் கரம்பிடித்துக்கொண்டனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷவுக்கும் நில்மினிக்கும் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.