கண்டியிலிருந்து கண்ணொருவ ஊடாக முருதலாவ செல்லும் வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பல நேரம் தடைப்பட்டது.

கண்ணொருவ - போமலுவ என்ற பகுதியில் இடம் பெற்ற இச்சம்பவம் காரணமாக மின் கம்பங்களும் சேதமடைந்து மின் விநியோகமம் பாதிப்படைந்தது. 

இதையடுத்து தற்போது நிலைமை சீரடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.