(நா.தினுஷா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து அவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்றால் நீதிமன்ற விசாரணைக்கு செல்ல வேண்டும், கோத்தாபய களமிறங்கினால் மாத்திரமே இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பெரும் வெற்றியை பெற முடியும். ராஜபக்ஷ குடும்பத்தில் யார் வேட்பாளராக களமிங்கினாலும் சவாலாக அமைய போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும் கூட்டு எதிரணியில் இடம்பெறும் குடும்ப ஆதிக்கத்தினால் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்பன்பில, பந்துல குணவர்தன ஆகியோருக்கென்று தனியான அடையாளம் இல்லாமல் போயுள்ளது. இந்நிலை நீடிக்குமாக இருந்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு நாட்டை ஆள்வதற்கான அதிகாரம் எதுவும் கிடைக்க போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அலரிமாளிகையில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
அங்கு மேலும் ஹெட்டியாராச்சி கூறியதாவது,
இந்த ஜனாதிபதி தேர்தல் புதிய பயணத்தின் ஆரம்பமாக அமைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் நெருக்கடியை சந்திதுள்ளதாக எதிர் தரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள். இந்நிலையில் பிரதமரின் முழு ஒத்துழைப்புடன் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளளோம். சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததன் பின்னர் கோத்தாபயவின் அணி நடுத்தெருவில் நிற்கிறது.
இவ்வளவு காலமும் கோத்தாவின் குடியுரிமை விவகாரத்தில் காணப்பட்ட பிரச்சினை வெளிவந்துள்ளது. இந்த விடயத்தை மூடி மறைக்க முடியாது. அவரின் கடவுச்சீட்டை உறுதிப்படுத்திக் கொள்ள நீதிமன்றம் முன்வந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவினூடாக இங்குவந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஷவின் அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றினார். பாதுகாப்பு செய்லாளராக நாட்டுக்கு ஓரளவு பணிகளை முன்னெடுத்திருந்தாலும் சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்டார். மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்காக முன்வந்துள்ளார்.
கோதாவின் குடியுரிமை தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமையுமாக இருந்தால் அடுத்த வேட்பாளரும் ராஜபக்ஷக்களின் குடும்பத்தை சேர்ந்தவராகவே இருப்பார். ஆகவே எதிர்தரப்பில் காணப்படும் இந்த குடும்ப ஆதிக்கத்தினால் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச , பந்துல குணவ்ரதன ஆகியோர் தனது அடையாளத்தை இழந்துள்ளனர். இவர்களுக்கு சவாலோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரமோ இல்லை. ஆகவே இறுதியில் இவர்களுக்கு ஜனாதிபதியாகுவதற்கோ அல்லது பிரதமராகுவதற்கோ வாய்ப்பு கிடைக்க போவதில்லை.
ஆகவே சர்வாதிகாரத்தின் பண்புகளை கொண்டுள்ள இந்த குடும்ப ஆட்சியிலிருந்து மீண்டு வெற்றிகரமான பாதையை நோக்கி செல்ல ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான எங்களின் அணியுடன் கைகோர்க்குமாறு சகல மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். மேலும் ஒருசில காரணங்களுக்காக இன்று அரசாங்கத்துக்குள் குழப்ப நிலையை தோற்றுவிக்க ஒருசிலர் முயற்சிக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரத்தையும் பாதாள குழுக்களின் கலாச்சாரத்தையும் நாட்டில் தோற்றுவித்தவர்களே இன்று ஆட்சி பீடம் ஏறியதும் இந்த செயற்பாடுகளை முற்றாக ஒழிப்போம் என்றும் மக்களிடம் வாக்குறுதி வழங்கி வருகிறார்கள்.
சகலரும் ஒன்றிணைந்து மஹிந்த கோத்தா ஆதிக்கத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறை சுதந்திரம் இருப்பதால் நாட்டின் சகல மக்களும் சட்டத்துக்கு மதிப்பளிக்க கூடியவர்கள். இருப்பினும் எதிர்தரப்பில் எவரும் முறையாக விசாரணைகளுக்கு முன்வருவதில்லை. தனது குடியுரிமை தொடர்பான விவகாரத்துக்கு நீதிமன்றத்துக்கு செல்ல பயமாக இருந்தால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கான அவசியம் இல்லை. ஆகவே அவர் மீது குற்றம் இல்லை என்றால் நீதிமன்ற விசாரணைக்கு தைரியமாக எதிர்க்கொள்ள வேண்டும்.
எனவே ராஜபக்ஷ குடும்பத்தில் யார் வேட்பாளராக களமிங்கினாலும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சவாலாக அமைய போவதில்லை. எங்களுடன் போட்டியிடக் கூடிய திறமையான வேட்பாளர் ஒருவர் எதிரணியில் இல்லை. எது எவ்வாறாயினும் எதிரணியிலிருந்து யார் வேட்பாளராக களமிறங்கினால் கோத்தாபய இந்த தேரத்லில் களமிறங்கினால் மாத்திரமே எங்களால் வெற்றியடைய முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM