அவிசாவளை கேகாலை பிரதான வீதியின் தல்துவ பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் ஒன்றும் ஆடைத்தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.