ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனாதி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தனக்­கு­ரிய ஓய்­வூ­தி­யத்­தையும் பெற்றுக்கொள்­கிறார்.

அதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கான சம்­ப­ளத்­தையும் பெற்றுக் கொள்­கிறார். மாதாந்த வருமானமாக 4,54,000 ரூபாவை பெறுவது  எந்­த­விதத்தில் நியாயம்? இவ்­வாறு சாதா­ரண நபர் ஒருவர் செய்தால் அது குற்­ற­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது என்று நிதி­ய­மைச்சர் ரவி­ க­ரு­ணா­நா­யக்க நேற்று முன்தினம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

மார்ச் மாதம் முதல் இவர் 54,285 ரூபா சம்பளம் அடங்கலாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபா பெற்று வருகிறார். இது தவிர மார்ச் மாதம் தொடக்கம் 97,500 ரூபா ஓய்வூதிய கொடுப்பனவு, 50 ஆயிரம் ரூபா செயலாளர் கொடுப்பனவு, 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபா எரிபொருள் கொடுப்பனவு அடங்கலாக 3 லட்சத்து 49 ஆயிரம் ரூபா பெற்றுவருகிறார்.

இவரின் பாதுகாப்புக்கு 107 பொலிஸார், 550 இராணுவத்தினர் மற்றும் பல டசின் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு–செலவுத் திட்­டத்தின் மீதான இறு­திநாள் விவா­தத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இங்கு மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக் ஷ இவ் வரவு–செலவுத் திட்டம் தொடர்­பாக பார­ாளு­மன்ற விவா­தங்­களில் கலந்து கொள்­ள­வில்லை. மாறாக விகா­ரை­க­ளுக்கு சென்று விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கிறார். இவர் தனது ஓய்­வூ­தி­ய­மாக 97500 ரூபா­வையும் இதர கொடுப்­ப­ன­வு­க­ளையும் பெற்றுக் கொள்­கிறார். அது­மாத்­தி­ர­மின்றி தற்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருப்­பதன் கார­ணத்தால் அப்­ப­த­விக்­கான சம்­ப­ளத்­தை­யு­மான 105,000

ரூபா­வையும், இதர கொடுப்­ப­ன­வு­க­ளையும் பெற்றுக்கொள்­கிறார். இவ்­வாறு நபர் ஒருவர் இரண்டு விதங்­களில் சம்­ப­ளத்­தையும் கொடுப்­ப­ன­வு­க­ளையும் பெற்­றுக்­கொள்­வது எவ்­வாறு நியாய­மாகும்? சாதா­ரண நபர் ஒருவர் இவ்­வாறு செய்­வ­தற்கு இய­லு­மாக உள்­ளதா? எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு விதி­வி­லக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

வரவு–செலவுத் திட்ட விவா­தத்தில் ஆளும் கட்சி எதிர்­க்கட்­சி­யென இரு­த­ரப்­பி­லி­ருந்தும் 182 உறுப்­பி­னர்கள் தமது கருத்­துக்­களை இங்கு பதி­வு­செய்­தி­ருக்­கின்றனர். சிலர் பாராட்­டி­யி­ருக்­கின்­றனர், சிலர் விமர்­சித்­தி­ருக்­கின்­றனர். விமர்­ச­னத்தை முன்­வைத்­த­வர்கள் நாம் வெள்ளைக்­கா­ரர்­க­ளுக்கு எமது காணி­களை சொந்­த­மாக வழங்கப்போவ­தாக குற்­றமும் சுமத்­தி­யி­ருந்­தனர். எனினும் முன்­னைய ஆட்சிக் காலத்­தின் ­போது எமது நாட்டின் பெறு­ம­தி­மிக்க காணிகள் வெள்ளைக்­காரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களை ஊக்­கு­வித்­து இங்கு முத­லீ­டு­களை அதி­க­ரிப்­ப­துடன் தேசிய முத­லீட்­டா­ளர்­க­ளுக்கும், உற்­பத்­தி­யா­­ளர்­க­ளுக்கும் முன்­னூ­ரிமை வழங்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.

நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே எமது

வரவு–செலவுத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே அனைவரும் ஒன்றி ணைந்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி

யெழுப்புவோம். முதலீடுகளை அதிகரிப் போம், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்து வோம், அனைவருமாக ஒன்றிணைந்து பய ணிப்போம் என்றார்.