ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து விளம்பரங்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பின்னர் அகற்றுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸார், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடையில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இது குறித்து அறிவிக்கப்பட்டது.
இவ் விடயம் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளதாவது,
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் போதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பேனர் , கட்டவுட் உள்ளிட்ட விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்படாத போஸ்டர், கட்டவுட் அலங்காரங்கள், பேனர்கள் அனைத்தும் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வேட்பு மனுத் தாக்கல் செய்யும் காலப்பகுதி நிறைவுறும்போது பொலிஸாரால் அகற்றப்படும் என தெரிவித்தார்.
வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது, அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் தொடர்பில் அறியப்படுத்த வேண்டும் எனவும் வேட்பாளர்களுக்கும் , வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM