குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, 'வட்ஸ்ஆப்' சமூக வலைத் தளம் திட்டமிட்டுள்ளது.

'வட்ஸ்அப்' சமூக வலைத்தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். அதே நேரத்தில், செய்தியை அனுப்பி, பெறுபவர் பார்ப்பதற்கு முன், அந்த செய்தியை இரத்து செய்யும் வசதி உள்ளது.

அவ்வாறு இல்லாமல், நம்முடைய செய்தியை பெறுபவர் படிக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, அந்த செய்தி, தானாகவே அழியும் வசதியை அறிமுகம் செய்ய, வட்ஸ் ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மிகவும் முக்கியமான செய்திகளை அனுப்பும்போது, பாதுகாப்பு கருதி, அது நீண்ட நாட்கள் மற்றவர்களிடம் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இந்த வசதி உதவும்.

இந்த திட்டத்தின்படி, செய்தியை நாம் அனுப்பும்போது, ஐந்து விநாடிகள் அல்லது ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அந்த செய்தி தானாகவே அழியும் வசதியை தேர்வு செய்ய வேண்டும். இது தொடர்பான சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஆனால், எப்போதிருந்து இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.