ஆசிரியர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம் 

Published By: Vishnu

02 Oct, 2019 | 10:07 PM
image

(ஆர்.விதுஷா, இரா. செல்வராஜா )

ஒருவார கால தொடர் லேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென எடுக்கப்பட்ட  முடிவு மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக அந்த போராட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகவும்  இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  தெரிவித்தார்.

எதிர்வரும் 7 ஆம்  திகதி  முதல் 12 ஆம்  திகதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன. 

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட பல கோரிக்கைகளை  முன்வைத்து கடந்த மாதம் 26, 27 ஆம் திகதிகளில் அதிபர்களும்,  ஆசிரியர்களும் நாடளாவிய ரீதியில்  சுகவீன விடுமுறை  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தை அடுத்து  ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற  அவசர அமைச்சரவை கூட்டத்தில் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு  காண்பதற்காக அமைச்சரவை  உபகுழு நியமிக்கப்பட்டது. 

இந் நிலையில் அமைச்சரவையின் உபகுழுவிற்கும் அதிபர், அசிரிய  தொழிற்சங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு  அமைய உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்  என  உறுதியளிக்கப்பட்டது. 

அதனை  கருத்திற்கொண்டே எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்க  தீர்மானித்திருந்த தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தினை  தற்காலிகமான  கைவிட்டுள்ளோம்.

வாக்குறுதிகளுக்கு  அமைய எமது சம்பள முரண்பாட்டுக்கான உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு இரண்டு வாரகால  அவகாசத்தையும் வழங்கியுள்ளோம். 

குறித்த கால எல்லைக்குள் தீர்வு கிடைக்கா விடின் முன்னைய   தீர்மானத்திற்கு அமைய தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபடுவோம்  என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37