(நா.தினுஷா)

தேசபிதா  மகாத்மா காந்தியின் 150 ஆவது  பிறந்த தின  நிகழ்வு இன்று புதன் கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, நவீன் திஸாநாயக்க, எம்.எச்.எ. ஹலீம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்தியா உயர்ஸ்தானிகத்தின் உறுப்பினர்களும் பிரதமர் அலுவலகத்தின் உறுப்பினர்களும் காந்தியின் இந்த நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்டார்கள்.

இதேவேளை  நினைவுத் தினத்தை முன்னிட்டு உயர்ஸ்தானிகர் எச்.இ.தரஞ்சித் சிங் சந்துவினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவுச் சின்னமாக காந்தியின் உருவச்சிலையொன்றை வழங்கினார். அதேபோன்று காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சினால் ஞாபகார்த்த முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.

இந்த ஞாபகார்த்த முத்திரையை அமைச்சர் எம்.எச்.எ. ஹலீம், பிரதமர், இந்திய உயரஸ்தானிகர் உட்பட நிகழ்வில் கலந்துக்கொண்ட அமைச்சர்களுக்கும் உத்தியோகப்பூர்வமாக வழங்கி வைத்தார்.