தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான யோகிபாபு பதினோரு வேடங்களில் நடிக்கிறார்

மனோன்ஸ் சினி கம்பைன்ஸ் சார்பில் ஆரூரான் தயாரிக்கும் திரைப்படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’. இந்த படத்தில் யோகிபாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி என முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் ராம் சுந்தர், பிரியங்கா ஆகியோர் நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள். 

தமிழ் திரையுலகின் மூத்த கதாசிரியரான விசி குகநாதன் கதை எழுத, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் புகழ்மணி. இந்த படத்திற்கு கணேசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தைப்பற்றி இயக்குனர் புகழ்மணி பேசுகையில்,“ காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார் .அதற்காக அவர் பதினோரு விதமான கெட்டப்புகளில் வந்து அதகளம் செய்திருக்கிறார் . இமான் அண்ணாச்சி மலையாள மாந்திரீகனாக நடித்து சிரிக்க வைக்கிறார் .வழக்கமான காதல் கதை என்றாலும் முழுக்க முழுக்க கொமடியும், கொமர்ஷல் அம்சங்களும் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

இதனிடையே யோகி பாபு, காதல் மோதல் 50 /50 , பன்னிக்குட்டி, மண்டேலா ,பப்பி என 25க்கும் மேற்பட்ட படங்களில் இடைவெளியே இல்லாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.